விளையாட்டு மூன்று முதல் ஐந்து எழுத்துக்கள் திரித்து கொடுக்கப்பட்டிருக்கும். எழுத்துக்களை முறையாக கோர்த்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் சொல்லை வரிசைப்படுத்துவது தான், விளையாட்டின் குறிக்கோள். அம்சங்கள் தவறான பதில் அளித்தாலோ அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கமுடியவில்லை என்றாலோ, தவறான பதில் என கருதப்படும். தவறான விடை அளிப்பின், சரியான பதிலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில புள்ளிகளை இழந்து சரியான விடையை தெரிந்து கொள்ளலாம். தொடர்வெற்றிகளுக்கு கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். குறிப்பிட்ட சொற்களை பொருத்தும் பட்சத்தில் சாதனை (Achievement) பட்டியலில் இடம் பெறுவீர்கள். விளையாடும் அனைவரின் முன்னணி(Leaderboard) விவரம், புள்ளிகள் சட்டகம் அழுத்தும் போது கிடைக்கும். ஒலியை நிறுத்தி(Mute) வைத்துக்கொள்ள முடியும். நேரம் ஓடி கொண்டிருக்கும் போது விளையாட்டை நிறுத்தமுடியாது.